சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

15 March 2010

" மாப்ள Bench " மாணவர்கள்...!















Class-ல இருக்கிற
கடைசி Bench-ஐ தான்
மாப்ள Bench-ன்னு சொல்லுவாங்க..

பொதுவாவே
மாப்ள Bench மாணவர்கள்
ரொம்ப நல்லவங்க..,
தங்கமானவங்க..,
பிரச்சனை பண்ணாதவங்க..

( தூங்கிட்டு இருக்கறவங்க பெருசா
என்ன பிரச்சனை பண்ண முடியும்..? )

ஆனா எதையும்
வித்தியாசமா சிந்திப்பாங்க..,
வித்தியாசமா செய்வாங்க..,
இப்படி...,

1st Bench மாணவர்கள் : Bore அடிக்குதுடா..,
MBA Coaching போலாமா..?

2nd Bench மாணவர்கள் : Bore அடிக்குதுடா..,
லைப்ரரிக்கு போலாமா..?

3rd Bench மாணவர்கள் : Bore அடிக்குதுடா..,
சினிமாவுக்கு போலாமா..?

மாப்ள Bench மாணவர்கள் : Bore அடிக்குதுடா..,
காலேஜ்க்கு போலாமா..?

பின் குறிப்பு :
நானெல்லாம் 1st Bench மாணவன்கிற
உண்மைய சொன்னாலும்..,
நீங்க நம்பவா போறீங்க..!!!
.
.

15 Comments:

Krish said...

bava... i'm proud to be a maapla bench maanavan... idhuku kudu oru blog pottu kalakkuringa ponga...

வெங்கட் said...

கிருஷ்..,
அன்புக்கு நன்றி..,
நம்மள பத்தி..,
Sorry., Sorry..,
நம்ம பசங்கள பத்தி
நாமளே எழுதலைன்னா.,
வேற யார் எழுதுவா..?

அன்புடன் அருணா said...

நம்பிட்டேன்!!!நம்பிட்டேன்!

வெங்கட் said...

அருணா மேடம்..,
நிஜமா நம்பிடீங்கல்ல..?
அப்ப சரி..,
நானும் உங்களை நம்பறேன்..

vijayan said...

நாங்கள் படித்த காலத்தில் (1960 களில்)மாப்ள பெஞ்ச் மாணவர்கள் சின்ன பசங்களை அன்போடு நடத்தினார்கள்.பள்ளிகூடத்தை ஒட்டிய கடைகளில் நமக்கு guarantee போட்டு கடன் வாங்கி தருவார்கள்.வேணும்போது கடனும் தருவார்கள்.அவர்கள் மனது வைத்தால் ஸ்கூல் டீமில் இடம் கிடைக்கும்.மேதாவி,சிரஞ்சீவி எழுதிய எட்டணா இலக்கியங்களை நமக்கு அறிமுகபடுத்தினார்கள்.கெட்டவார்த்தை பேசும்போது போனால் இடத்தைவிட்டு துரத்துவார்கள்.நாம் நல்லா படித்தால் பொறாமை படமாட்டார்கள்.உடன்பிறவா சகோதரர்கள்.

Unknown said...

முதல் வரிசையில் உக்காரதுல ஒரு வசதி
யாரும் கேள்வி கேக்க மாட்டங்க...
நான்,வெங்கட், முருகன் & ஜலகை வெங்கடெஷ் முதல் Bench மாணவர்கள் என்று பெருமையொடு சொல்லி கொள்கிறேன். அதனால எத்தனையோ கொடுமைகளை அனுபவித்து இருக்கிறார்கள் எங்க Professorகள். வெங்கட் அதுக்கு தனியா ஒரு Blog போடுப்பா...!
அந்த Krish நம்ம Bawa va... அப்படின்னா ஒரு வணக்கம் சொல்லிடு..

வெங்கட் said...

விஜயன் சார்..,
அப்ப மாப்ள Bench மாணவர்கள்
எல்லா காலகட்டத்திலும்
நல்லவர்களாவே இருந்திருக்காங்கன்னு
உங்க Comment-ஐ பார்த்தா புரியுது சார்..

வெங்கட் said...

ஜனா..,
முதல் Bench மாணவர்கள்
ஆசிரியரை எவ்ளோ கொடுமை
படுத்துவாங்கன்னு வேணா ஒரு
பதிவு எழுதலாம்..

இந்த Krish வேற..,
நம்ம் Krish-க்கு Phone பண்ணி

" வெட்டியா தானே இருக்கே..,
என் Blog-காவது படிறான்னு
சொன்னா.., அவன் பதில் என்ன
தெரியுமா..? "

" அதை படிச்சா., ஒரு வேலை
செஞ்ச மாதிரி ஆயிடுமே..!
அப்புறம் மனசு ரொம்ப கஷ்டப்படும்கிறான்..! "

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட் - நான் படிக்கும் காலத்தில் முதல் பெஞ்ச் மாணவன் தான்

ஆமா பொய் சொல்லாம சொல்லு - நீ மாப்ள பெஞ்சு மாப்ள தானே - கரெக்டா யோசிச்சிருக்கே - காலேஜுக்குப் போயி ம்ம்ம்ம்ம்ம்

இதுல ஜனா சப்போர்ட்டு வேற நீங்கல்லாம் மொத பெஞ்சு மாணவர்கள்னு

வெங்கட் said...

சீனா சார்..,
நான் School-ல படிக்கும் போது
மாப்ள Bench மாணவன் தான்..,
அதுக்கு காரணம்...
நான் Maths., Science-ல சுமார்..,

ஆனால் B.Com-ல் முதல் Bench
மாணவன்..,
Accounts எனக்கு ரொம்ப நல்லா
வரும்..
ஜனா சொன்னது உண்மை..
அவர் என்னோட B.Com நண்பர்..

MCA-ல் 2nd Bench..

Anonymous said...

உங்க புளொக் முழுவதுமாக வாசித்து முடித்துவிட்டேன். வயிறு புண்ணாகியது தான் மிச்சம். அதிலும் உங்க பஞ்ச இருக்கே, வரே வாவ். இந்த பூனையும் பால் குடிக்குமான்னா அது பால் பாயசத்த குடிச்சிட்டு பார்சல் பண்ணிக் கொண்டு போச்சாம் மற்றும் தானே மசாலாவை பூசிக்கொண்டு எண்ணையில் மீன் குதித்ததாம் இரண்டும் மறக்க முடியாதவை.

வெங்கட் said...

அனாமிகா..,
மிகவும் சந்தோஷம்..,
தொடர்ந்து படியுங்கள்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

venkattukku oru bench paarcel

வெங்கட் said...

ரமேஷ்..,
ஆஹா.., Bench பார்சல்ல வருதா..?
அந்த Bench-ல தூங்கற சுகம் இருக்கே..
அட.., அதெல்லாம் அனுபவிச்சி
பார்க்கணுங்க...!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஐயா ராசா... என் தங்கம் ..ஒத்துக்கிறேன்..

நீயும் காலேஜ் போயிருக அப்படீன்னு ஒத்துக்குறேன்...