சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

28 July 2011

ஒரு பிளாக்கரின் பீலிங்..!!


காலத்தின் ஓட்டத்தில்
காணாமல் போய்விடுவேன் என
சினிமாவையும்.,
கிரிக்கெட்டையும்
தள்ளி வைத்தேன்..

பொழுதை வீணாய்
போக்க வேண்டாமென
என் Twitter-யும்.,
Facebook-யும் Open
செய்வதில்லை..

நண்பர்களின் Buzz-ஐ கூட
Unfollow செய்தேன்..
மற்றவரை Follow செய்வது
தப்பென்று நினைத்து..

இப்பொழுதெல்லாம்
மௌனமாக இருக்கவே
விழைகிறேன்..
அதிகம் Chat செய்துவிட்டேன்
என நினைக்கையில்..

இன்னும் தொங்கி கிடப்பது
என் Blog..

அதையும் மறந்தால் தான்
உருப்படுவேன் எனில்..

விட்டுவிடுங்கள்...
நான் உருப்படாதவனாகவே
இருந்துவிட்டு போகிறேன்..!!

ஹி., ஹி., ஹி......!!

- கவி இளவரசு வெங்கட்
.
.

37 Comments:

Unknown said...

அட்ரா அட்ரா!!

RAMA RAVI (RAMVI) said...

ஹா ஹா கவிதை கவிதை, பிரமாதம்..

Unknown said...

கவிதை.....கவிதை.

அருண் பிரசாத் said...

//"ஒரு பிளாக்கரின் பிலீங்..!!"//

என்னா பீலிங்கு....

//காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போய்விடுவேன் என
சினிமாவையும்.,
கிரிக்கெட்டையும்
தள்ளி வைத்தேன்..//

அது சொந்தமா யோசிச்சு பதிவு எழுதறவங்க செய்ய வேண்டிய வேலை... உங்களுக்கு என்ன... பழைய இ மெயில், புண்ணாக்கு எஸ் எம் எஸ் வெச்சி காப்பி பேஸ்ட் செய்யறதுக்கு அதை தள்ளி வெக்கனும்னு அவசியமே இல்லை

//பொழுதை வீணாய்
போக்க வேண்டாமென
என் Twitter-யும்.,
Facebook-யும் Open
செய்வதில்லை.. //
அடங்க மாட்டோல... அப்படினு பக்கதுல சுத்தறது என்னது அப்போ....

facebook எப்படி open செய்யனும்னு தரியாதுனு சொல்லுங்க... போய் கோகுல் இல்லைனா சூர்யாவை கேளுங்க சொல்லித்ருவாங்க

//நண்பர்களின் Buzz-ஐ கூட
Unfollow செய்தேன்..
மற்றவரை Follow செய்வது
தப்பென்று நினைத்து..//
இவரு பெரிய பஸ் ஓனரு 5, 6 பஸ் வெச்சி இருக்காரு பாலோ பண்ண....
ஊரோட ஒத்து வாழுங்க சார்...

//இப்பொழுதெல்லாம் மௌனமாக இருக்கவே
விழைகிறேன்..
அதிகம் Chat செய்துவிட்டேன்
என நினைக்கையில்.. //
வெட்டியா இருக்கறேன்னு நேராவே சொல்லுறது.... அதுல் என்ன டீசன்சி...

//இன்னும் தொங்கி கிடப்பது
என் Blog..//
அது மட்டுமா? நீங்க கூடதான்னு சொல்ல வந்தேன்

//அதையும் மறந்தால் தான்
உருப்படுவேன் எனில்..//
இப்போ மட்டும் என்ன வாழுதாம்...

//விட்டுவிடுங்கள்...
நான் உருப்படாதவனாகவே
இருந்துவிட்டு போகிறேன்..!!//
கடைசி வரைக்கு எழுதுறதை நிறுத்தி உங்க பிளாக்கையும், அதை படிக்கற எங்களையும் உருப்பட வைக்க மாட்டேன்னு சொல்லுறீங்க.

//கவி இளவரசு வெங்கட்//
இது யாரு இது....

கமர்கட்டு, பாப்கார்ன் விக்கறவன் எல்லாம் தொழில் அதிபருனு சொல்லிட்டு திரியறானுங்க.... எல்லாம் எங்க தலை எழுத்து....

ரசிகன் said...

//Unfollow செய்தேன்..
மற்றவரை Follow செய்வது
தப்பென்று நினைத்து..//

இவரு Blogஐ Follow செய்கிற பேரன்பு மிக்க 343 பொதுமக்களே...
Please note the point and follow what he did by not following him.

Unknown said...

paarra!

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ஆழ்ந்த சிந்தனைகள்.அறிவார்ந்த கருத்துக்கள்.தெளிந்து விட்டது தமிழ் ப்ளாக் உலகம்...

Mohamed Faaique said...

///காலத்தின் ஓட்டத்தில்
காணாமல் போய்விடுவேன் என ///

இப்போ எங்க இருக்கீங்க????

///சினிமாவையும்.,
கிரிக்கெட்டையும்
தள்ளி வைத்தேன்..///

சினிமா போனா செலவாகும்..
கிரிக்கட் விளையாட தெரிஞ்சிருக்கனும்...

///பொழுதை வீணாய்
போக்க வேண்டாமென
என் Twitter-யும்., ///

ட்வீட் பண்ணினா பொழுதை வீணாக்கி படிக்கிறதுக்கு எவனும் இல்லையே!!!

Mohamed Faaique said...

////மற்றவரை Follow செய்வது
தப்பென்று நினைத்து..///

அது உங்கள மனசுல வச்சு நாங்க சொல்ரதுங்க....

////இப்பொழுதெல்லாம்
மௌனமாக இருக்கவே
விழைகிறேன்..///

சும்மா இருக்குரவன் கிட்ட பேச்சு குடுத்து, எவ்வளவு பல்பு வாங்கியிருப்பாரு...

///விட்டுவிடுங்கள்...
நான் உருப்படாதவனாகவே
இருந்துவிட்டு போகிறேன்..!!///

இனிமேல், ``என்றும் உருப்படாத VAS தலைவர்``னு கூப்பிடலாமா??

////கவி இளவரசு வெங்கட்/////

இதுக்கு, கவிக்குழந்த்தை`னு பேர் போட்டு "பெப்பே..பெப்பேபே`னு எழுதி இருக்கலாமோ!!!!

Mohamed Faaique said...

//"ஒரு பிளாக்கரின் பிலீங்..!!"///

கடைசி வரைக்கும் யார் அந்த ப்லாக்கர்`னு சொல்லவே இல்ல.....

தமிழ்வாசி பிரகாஷ் said...

டீலிங் நல்லாயிருக்கு.

வெங்கட் said...

@ சிவா., ராம்வி, கலாநேசன்.,

ரொம்ப நன்றிங்க..

இந்த நன்றி கவிதையை
பாராட்டினதுக்கு இல்ல..

இதை கவிதைன்னு ஒத்துகிட்டதுக்கு..!

வெங்கட் said...

@ அருண்.,

// பழைய இ மெயில், புண்ணாக்கு SMS
வெச்சி காப்பி பேஸ்ட் செய்யறதுக்கு //

அந்த இ-மெயில்., SMS எல்லாம்
நானே சொந்தமா யோசிச்சி எழுதினது..
அதை தான் எல்லோருக்கும் அனுப்பி
வெச்சேன்...

அப்புறம் எப்படிங்க அது காப்பி பேஸ்ட்
ஆகும்..?!

// அடங்க மாட்டோல... அப்படினு
பக்கதுல சுத்தறது என்னது அப்போ....//

ஆமா இவரு பெரிய சுப்ரீம் கோர்ட்
வக்கீலு.. பாயிண்ட் பிடிக்கறாராம்
பாயிண்ட்..

அக்கவுண்டே இல்லன்னா சொன்னேன்..?!
Twitter Account இருக்கு.. ஆனா அதை
இப்ப Open பண்றதில்லன்னு தான்
சொன்னேன்..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// இவரு Blogஐ Follow செய்கிற
பேரன்பு மிக்க 343 பொதுமக்களே...
Please note the point and follow what
he did by not following him. //

இதெல்லாம் நியாயமா..? அடுக்குமா..?
இப்படி போட்டு குடுத்து ஒருத்தரை
கழண்டுட்டு போக வெச்சிட்டீங்களே..!

இப்ப Followers 342 தான்..

@ ஆல் மை பாலோவர்ஸ்..

// நண்பர்களின் Buzz-ஐ கூட
Unfollow செய்தேன்..
மற்றவரை Follow செய்வது
தப்பென்று நினைத்து.. //

இது சும்மா உல்லுலாய்க்கு..
நீங்க கண்டுக்க வேணாம்..!

" கவிதைக்கு பொய் அழகு..! "
நீங்க கேள்விபட்டது இல்ல..

( ஐயோ.. தனியா புலம்ப வுட்டுடாங்களே..! )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மேன்மை தாங்கிய வெங்கட் அவர்களின் மேலான சமூகத்திற்கு,
தங்கள் கவிதை கண்டு அளவிலா களிப்பேருவகை அடைந்து இன்புற்றேன். அதன் படிக்க படிக்கத் திகட்டாத சொற்சுவையும் பொருட்சுவையும் அடிவயிற்றில் மாபெரும் பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டன. தாங்கள் பயன்படுத்தியுள்ள பின்நவீனத்துவ உத்திகள், வார்த்தைகளுடன் கலந்து படிப்பவர்களை கழிப்பிடத்தை நோக்கி விரையச் செய்கின்றன. கவிதையின் கடைப்பாகத்தில் வரும் சர்ரியலிச உவமைகள் உடம்பை புண்ணாக்குகின்றன. மொத்தத்தில் இதுநாள் வரை தாங்கள் எழுதிவந்த கவிதைகள் அனைத்தையும் வீழ்த்திவிட்டது இக்கவிதை!

மென்மேலும் தொடரட்டும் உங்கள் பொன்னான கவிப்பணி என்று வாழ்த்தி வணங்கியவனாக விடை பெறுகிறேன்.

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள
பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ப்ளாக்கர்னா www.blogger.com தானே? அது ஏன் ஃபீல் பண்ணுச்சு? வெங்கட் மாதிரி ஆளுகள்லாம் ப்ளாக்கர் அக்கவுண்ட் வெச்சிருக்காங்கன்னா?

HVL said...

அருமை! அருமை!

இந்த தத்துவக் கவிதையை
தமிழ் பாட புத்தகத்தில், செய்யுள் மனப்பாடப் பகுதியாக சேர்க்கும்படி தமிழக அரசை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

இந்திரா said...

//நண்பர்களின் Buzz-ஐ கூட
Unfollow செய்தேன்..
மற்றவரை Follow செய்வது
தப்பென்று நினைத்து..//


அட அட.. என்ன ஒரு சிந்தனை????

இந்திரா said...

//இன்னும் தொங்கி கிடப்பது
என் Blog..

அதையும் மறந்தால் தான்
உருப்படுவேன் எனில்..

விட்டுவிடுங்கள்...
நான் உருப்படாதவனாகவே
இருந்துவிட்டு போகிறேன்..!!//



உருப்படாத வெங்கட் வாழ்க..

kaialavuman said...

திரு ப.ராமசாமி,

அவர்தான் பின் தொடர்வதில்லையே, அப்புறம் அது எப்படி பின் நவீனத்துவம்; இது பின் “தொடரா” நவீனத்துவம் தான்.

samhitha said...

//என் Blog..
அதையும் மறந்தால் தான்
உருப்படுவேன் எனில்..
விட்டுவிடுங்கள்...
நான் உருப்படாதவனாகவே
இருந்துவிட்டு போகிறேன்..!!
//
நான் உருப்படாம போனாலும் உலக மக்களை காப்பாத்துவேன்னு ப்ளாக்க மட்டும் விடாம இருக்கீங்களே நீங்க சிம்ப்ளி கிரேட் வெங்கட்

//இதுக்கு, கவிக்குழந்தை`னு பேர் போட்டு "பெப்பே..பெப்பேபே`னு எழுதி இருக்கலாமோ!!!!//
ஆளுக்குத் தகுந்த சிந்தனை ;)

///நண்பர்களின் Buzz-ஐ கூட
Unfollow செய்தேன்..//

எஸ் தன்னை பாலோ செய்ய வைப்பவனே உண்மையான தலைவன்

வெங்கட் said...

@ மணி.,

// ஆழ்ந்த சிந்தனைகள்.அறிவார்ந்த கருத்துக்கள்.
தெளிந்து விட்டது தமிழ் ப்ளாக் உலகம்... //

நன்றி.. இதே போல் தமிழ் பிளாக் உலகம்
எப்போதெல்லாம் மயங்கி, மயங்கி
விழுகிறதோ.. அப்போதெல்லாம் இந்த
வெங்கட் கவிதையோடு வருவான்...

வெங்கட் said...

@ Mohamed.,

// ட்வீட் பண்ணினா பொழுதை வீணாக்கி
படிக்கிறதுக்கு எவனும் இல்லையே!!! //

ஏன் இல்ல... எங்க பெரியப்பா பசங்க
4 பேரு., சித்தப்பா பசங்க 4 பேர்
இருக்காங்னுக..

அவங்களை இழுத்துட்டு வந்து.,
கட்டி வெச்சி. உதைச்சாவது படிக்க
வைப்போம்ல..!

வெங்கட் said...

@ Mohamed.,

// இதுக்கு, கவிக்குழந்த்தை`னு பேர்
போட்டு "பெப்பே..பெப்பேபே`னு எழுதி
இருக்கலாமோ!!!!//

நான் எது எழுதினாலும் அது கவிதை
தானுங்க..!

" வைரமுத்து வாலி கவிஞர் என்பர்
வெங்கட் கவிதை படிக்காதவர்.! "

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// அதன் படிக்க படிக்கத் திகட்டாத
சொற்சுவையும் பொருட்சுவையும்
அடிவயிற்றில் மாபெரும் பிரளயத்தையே
ஏற்படுத்திவிட்டன.//

" கலக்கிட்டீங்க வெங்கட்னு " போன்ல
சொன்னீங்களே.. அது இதானா..!!?

வெங்கட் said...

@ HVL.,

// இந்த தத்துவக் கவிதையை
தமிழ் பாட புத்தகத்தில், செய்யுள்
மனப்பாடப் பகுதியாக சேர்க்கும்படி
தமிழக அரசை தாழ்மையுடன்
கேட்டுக் கொள்கிறேன்! //

அதுக்காக தானே தமிழக அரசு
சுப்ரீம் கோர்ட் வரை போயி.,
" வெங்கட் கவிதை " இல்லாத
சமச்சீர் கல்வி புத்தகத்தை மாணவர்களுக்கு
தர கூடாதுன்னு கேஸ் நடத்திட்டு இருக்கு..!

வெங்கட் said...

@ இந்திரா.,

// உருப்படாத வெங்கட் வாழ்க.. //

அடங்க மாட்டாங்க போலயே..

கொஞ்சம் கேப் கிடைச்சாலும் உடனே கோஷம் போட ஆரம்பிச்சுடறாங்க..

வெங்கட் said...

@ வேங்கட ஸ்ரீனிவாசன்.,

// அவர்தான் பின் தொடர்வதில்லையே,
அப்புறம் அது எப்படி பின் நவீனத்துவம்;
இது பின் “தொடரா” நவீனத்துவம் தான். //

நான் எழுதியிருக்கிறது எங்க வகை
சேர்ந்ததுன்னு பேசி சீக்கிரம் ஒரு
முடிவுக்கு வாங்கப்பா..

நாளைக்கு யாராவது என்னை கேட்டா..
நானும் சொல்லணும்ல..!

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// நான் உருப்படாம போனாலும்
உலக மக்களை காப்பாத்துவேன்னு
ப்ளாக்க மட்டும் விடாம இருக்கீங்களே
நீங்க சிம்ப்ளி கிரேட் வெங்கட் //

எல்லோரும் நம்மள பாராட்டணும்னு
ஆசைப்பட்டா.. தினமும் சூரியன்
உதிக்குது.. அது மாதிரி தான்..

நம்ம மக்களுக்கு நல்லது செய்ய
வேண்டியது நம்ம கடமை..!
:)

பெசொவி said...

//இன்னும் தொங்கி கிடப்பது
என் Blog..

அதையும் மறந்தால் தான்
உருப்படுவேன் எனில்..

விட்டுவிடுங்கள்...
நான் உருப்படாதவனாகவே
இருந்துவிட்டு போகிறேன்..!!//

ப்ளாக் ஆராம்பிச்சப்புறம்தான் உருப்படாம போனா மாதிரி பேசறீங்களே, இது கொஞ்சம் ஓவர் தான்!

பெசொவி said...

@வெங்கட்
//" வைரமுத்து வாலி கவிஞர் என்பர்
வெங்கட் கவிதை படிக்காதவர்.! "//

கொஞ்சம் மாத்தி எழுதியிருக்கணும், இப்படி
//" வைரமுத்து வாலி - கவிஞர் என்பர்.
வெங்கட் - கவிதை படிக்காதவர்.! "//

பெசொவி said...

@ all
எதிர்கவிதை(?!)இங்கே

”தளிர் சுரேஷ்” said...

ஒரு பிளாக்கரின் ஃபீலிங்க் ரொம்ப நன்னாருக்கு! பேஷ்! பேஷ்!

அப்பாதுரை said...

body everything grass itching..

Vimalraj R said...

As usual you took this from elavarau?
he.. he.. he..

கலைவேந்தன் said...

இந்த கவிதைக்காகவே ஒரு கலைமாமாமணி விருதை சிபாரிசு செய்யலாமான்னு யோசிக்கிறேன்..

Unknown said...

விட்டுவிடுங்கள்...
நான் உருப்படாதவனாகவே
இருந்துவிட்டு போகிறேன்..!!


எல்லாரும் சொன்னங்கங நீங்க ரொம்ப நல்லவருன்னு